தீப்பிடித்து எரிந்த லாரியில் 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், டீசல் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்த லாரியில் 10 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் 10 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெரும் விபத்தும், உயிர் சேதமும் தீயணைப்பு வீரர்கள் முயற்சியால் தடுக்கப்பட்டுள்ளது.
சூளகிரி,
கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஓசூர் நோக்கி சென்ற பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்ட லாரி சூளகிரி அருகே தீ விபத்தில் சிக்கியது. இதில் லாரியின் முன்புறம் முதலில் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் பின்புற டேங்கரில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி, ஓசூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால் கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் இருபுறமும் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. இதனால் கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு வந்த வாகன ஓட்டிகள், பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் தீ விபத்து குறித்து காவேரிப்பட்டணம் அருகே திம்மாபுரம் பக்கமுள்ள சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் சக்திவேல் (வயது 35) என்பவர் சூளகிரி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் டேங்கர் லாரி சங்ககிரியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு வந்து கொண்டிருந்ததாகவும், அதில் 10 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் 10 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்ததாகவும் திடீரென்று லாரியின் முன்பகுதியில் தீப்பிடித்ததாகவும் கூறியுள்ளார்.
அதன்பேரில் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். லாரியின் டேங்கரில் மட்டும் தீ முழுமையாக பிடித்திருந்தால் சுற்று வட்டாரத்தில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வெடித்து சிதறி, ஏராளமான உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக தீயணைப்பு வீரர்கள் முயற்சியால் பெரும் உயிர் சேதமும், பொருட்சேதமும் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.