வேளாங்கண்ணி கடற்கரையில் 3 வாலிபர்கள் பிணம் கடலில் மூழ்கி இறந்தார்களா? போலீசார் விசாரணை
வேளாங்கண்ணி கடற்கரையில் 3 வாலிபர்கள் பிணமாக கிடந்தனர். இவர்கள் கடலில் மூழ்கி இறந்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெரு வடக்கு பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடப்பதாக கீழையூர் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பிணமாக கிடப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கீழையூர் கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 வாலிபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வேளாங் கண்ணி கிராம நிர்வாக அலுவலர் ரெத்தினசபாபதி கொடுத்த புகாரின் பேரில் கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடற்கரையில் பிணமாக கிடந்த 3 வாலிபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? இவர்கள் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த போது கடலில் குளிக்கும் போது மூழ்கி இறந்தார்களா? அல்லது கொலை செய்யப்பட்டு கடற்கரையில் வீசப்பட்டார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரையில் 3 வாலிபர்கள் பிணமாக கிடந்தது வேளாங் கண்ணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.