ஆவாரம்பாளையத்தில் ரெயில்வே மேம்பாலத்துக்காக கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி தீவிரம்
ஆவாரம்பாளையத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை,
கோவை ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட் வழியாக தினமும் 70- க்கும் மேற்பட்ட ரெயில்கள் கோவை ரெயில் நிலையத்துக்கு வருகின்றன. இதனால் ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட் பல முறை திறந்து மூடப்படுகிறது. இதன் காரணமாக அந்த சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கேட் திறக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோவை அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலையில் வரும் வாகனங்கள் காந்திபுரம் செல்லாமல் சத்தி சாலைக்கு செல்ல வேண்டும் என்றால் இருக்கும் ஒரே சாலை ஆவாரம்பாளையம் சாலை தான். அந்த சாலையை அடைவதற்கு வரும் வாகனங்கள் ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. எனவே ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்றகோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட் மூடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
முதல்கட்டமாக ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட் தண்டவாளத்தின் மீது உள்ள பாலம் மட்டும் ரெயில்வே துறையின் மேற்பார்வையில் கட்டப்படுகிறது அந்த பாலம் 20 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம், தரையில் இருந்து 6½ மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. கான்கிரீட் தூண்கள் அமைப் பதற்காக தண்டவாளத்தின் இரு பக்கமும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
ஆவாரம்பாளையம் பகுதியில் கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சிமெண்டு கலவைக்குள் பொருத்துவதற்காக இரும்பு கம்பிகள் கட்டப்பட்டுள்ளன.
ரெயில்வே மேம்பாலத்துக்காக கணபதி பகுதியில் கான்கிரீட் தூண்கள் அமைக்க பள்ளம் தோண்டப் பட்டுள்ளது. ஆனால் அந்த தூண்கள் ரெயில் தண்டவாளத்துக்கு அருகில் உள்ளதால் பாலம் கட்டுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்காக பூமி மட்டத்துக்கு மேல் கம்பி கட்டும் போது அருகில் ரெயில்கள் செல்லும் போது அதிர்வினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ரெயில்களின் வேகத்தை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இது குறித்து அனைத்து ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு ரெயில்களை மெதுவாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னர் தூண்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.
புதிதாக அமைக்கப்படும் ரெயில்வே மேம்பாலத்துக்கு அருகே 13 மீட்டர் தூரத்தில் சுரங்கப்பாதை (சப்வே) அமைக்கப்பட உள்ளது. 9 அடி உயரம், 15 அடி அகலம், 80 அடி நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் பொதுமக்கள் நடந்து செல்லலாம். ஆனால் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாது.
இந்த சுரங்கப்பாதை ‘பாக்ஸ் புஷ்சிங்’ தொழில்நுட்பத்தில் ‘ஹைட்ராலிக்’ முறையில் அமைக்கப்படும். இதற்காக ரெயில் தண்டவாளத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது. மேல் பகுதியில் ரெயில்கள் வழக்கம் போல செல்லும். ரெயில்வே மேம்பாலம் ரூ.26 கோடி செலவில் அமைக்கப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ரெயில் தண்டவாளத்தின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட உள்ள இந்த ரெயில்வே மேம்பாலம் 12 மீட்டர் அகலத்திலும், 770 மீட்டர் நீளத்திலும் அமைய உள்ளது. இரு வழிப் பாதையாக கட்டப்பட உள்ள இந்த பாலத்தின் கீழ் இரண்டு புறமும் வாகனங்கள் செல்வதற்காக சேவை சாலையும் அமைக்கப்பட உள்ளது.