தனுஷ்கோடி கடலில் மூழ்கி சிறுவன் பரிதாப சாவு: மேலும் 2 சிறுமிகள் கதி என்ன?
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். மாயமான 2 சிறுமிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம்,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா செலுகை கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன். ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 பேருடன் ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் ராமேசுவரத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு தனுஷ்கோடிக்கு சென்றனர். அங்கு அரிச்சல்முனை பகுதியில் அனைவரும் கடலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது கடற்கரையில் ஜெகநாதன் என்பவருடைய மகள் இனிதா (வயது10), ஆனந்தன் மகன் இனியவன்(10), பூமிநாதன் மகள் சுபேதா(11) ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் 3 பேரும் திடீரென மாயமாகி விட்டனர். இதையடுத்து பதறிப்போன உறவினர்கள் அங்கும் இங்கும் தேடி அலைந்தனர்.
அப்போது கடல் அலையில் சிக்கிய சிறுவன் இனியவன் மட்டும் பிணமாக கரை ஒதுங்கினான். இதனைக்கண்டதும் அனைவரும் கதறி அழுது துடிதுடித்தனர். மற்ற 2 சிறுமிகளின நிலைமை என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் கடல் அலையில் அடித்துச்சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தகவல் அறிந்ததும் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பிரபு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன், கடலோர போலீசார், தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு வந்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர். மகிழ்ச்சிக்காக சுற்றுலா வந்த இடத்தில் நடந்த இந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கோடை விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ராமேசுவரத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். தற்போது தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை வசதி உள்ளதால் அனைவரும் அங்கு சென்று கடலின் அழகை ரசித்து வருகின்றனர். தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் வழக்கமாக கடல் கொந்தளிப்புடன் இருக்கும். இதனால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்வமிகுதியால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையையும் மீறி கடலில் இறங்கி குளிக்கின்றனர். இதனால் எதிர்பாராதவிதமாக சில நேரங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்து பலர் உயிரிழந்துள்ளனர். இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.