கோவில்பட்டியில் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு

கோவில்பட்டியில் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது.

Update: 2018-05-04 21:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது.

பள்ளிக்கூட வாகனங்கள்

ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் பள்ளிக்கூட வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் உள்ள பஸ்கள், வேன்கள் உள்ளிட்ட 184 வாகனங்களை ஆய்வு செய்யும் பணி, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது.

வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னர், மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், தொடக்க கல்வி அலுவலர் செல்லகுருசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வு

பள்ளிக்கூட வாகனங்களில் தீயணைப்பான் கருவி, முதலுதவி பெட்டி, அவசர வழி, இருக்கைகள், படிக்கட்டுகள், நடைபாதை பலகை மற்றும் உட்கட்டமைப்புகள் தரமாக அமைக்கப்பட்டு உள்ளனவா? என்றும், வாகனங்களின் தகுதிச்சான்று, காப்பீடு புதுப்பிக்கப்பட்டு உள்ளனவா? என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் வாகன ஓட்டுனர்கள், நடத்துனர்களின் உரிமங்களையும் ஆய்வு செய்தனர்.

இதில் குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் அதனை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்