ரூ.23 லட்சம் போதைப்பொருளுடன் 2 வாலிபர்கள் கைது

நவிமும்பையில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளுடன் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-05-03 23:32 GMT
மும்பை,

நவிமும்பை ஜூயி நகர் ரெயில் நிலையம் அருகே 2 வாலிபர்கள் போதைப்பொருளுடன் நின்று கொண்டிருப்பதாக நெருல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த குறிப்பிட்ட 2 வாலிபர்களையும் பிடித்து போலீசார் சோதனையிட்டனர்.

இந்த சோதனையின் போது, அவர்களிடம் இருந்த எம்.டி. என்ற போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த போதைப்பொருள் 768 கிராம் எடை கொண்டதாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.23 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நதீம் சல்மானி(வயது20) என்பதும், மற்றொருவர் 17 வயது வாலிபர் என்பதும் தெரியவந்தது. அவர்கள் ஜூயி நகரை சேர்ந்த ஒருவரிடம் கொடுப்பதற்காக போதைப்பொருளை உத்தரபிரதேசத்தில் இருந்து ரெயிலில் கடத்தி கொண்டு வந்ததாகவும், இதற்காக தங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் கமிஷன் கிடைக்க இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்