ஈரோட்டில் சைக்கிள் உதிரிபாகங்கள் குடோனில் தீ விபத்து
ஈரோட்டில் சைக்கிள் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டு இருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.;
ஈரோடு,
ஈரோட்டில் சைக்கிள் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டு இருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் அருகில் உள்ள வங்கியின் பின்கதவு எரிந்து சாம்பலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கச்சேரி வீதியில் தனியாருக்கு சொந்தமான சைக்கிள் உதிரிபாகங்கள் குடோன் உள்ளது. இந்த குடோனை ஊழியர்கள் நேற்று முன்தினம் அடைத்துவிட்டு சென்றனர். நேற்று அதிகாலை குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளிவந்தது. அந்த வழியாக சென்றவர்கள் கிடங்கில் இருந்து புகை வந்ததை பார்த்ததும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் நிலைய அதிகாரி மயில்ராஜூ தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு குடோனின் பின் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த காலி அட்டை பெட்டிகளில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குடோனுக்கும், அருகில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கும் இடைப்பட்ட பொதுச்சுவரின் கதவிலும் தீப்பற்றி எரிந்தது. சுமார் ஒரு மணிநேரம் தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வங்கியின் பின்கதவு முழுமையாக எரிந்து நாசமானது. மேலும், குடோனில் வைக்கப்பட்டு இருந்த ஒரு சில சைக்கிள் உதிரிபாகங்களும் தீயில் கருகியது.
தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வங்கியின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் வங்கிக்குள் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சைக்கிள் உதிரிபாகங்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், வங்கியின் பின்கதவு முழுமையாக எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.