சென்னிமலையில் உள்ள குடோனில் அதிகாரிகள் சோதனை: ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
சென்னிமலையில் உள்ள குடோனில் அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.
சென்னிமலை,
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பான்மாசாலா, குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை விற்பவர் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில், சென்னிமலையில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அதிகாரி டாக்டர் கலைவாணிக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் டாக்டர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எஸ்.செல்வன், எட்டிக்கண், பழனிச்சாமி, மணி, கேசவராஜ், ராஜா சந்திரன், சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 12 மணி அளவில் சென்னிமலை குமராபுரியில் மளிகை கடைக்காரர் ஒருவருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர்.
அப்போது குடோனுக்குள் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட பொருட்களான பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் உட்பட 11 பொருட்கள் பெட்டி, பெட்டியாக இருந்ததை கண்டுபிடித்தார்கள். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கலைவாணி கூறுகையில், ‘பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் எடை 124 கிலோ. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் இருந்து மாதிரிக்காக எடுத்து அதில் எந்த அளவு நிகோடின் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்க உள்ளோம். குட்கா பொருட்களை வைத்திருந்த குடோன் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்படும். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கு விற்பனை செய்தாலும் சென்னையில் உள்ள உணவு பாதுகாப்பு இணை அதிகாரி அலுவலகத்துக்கு 94440 42322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் 24 மணி நேரமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்’ என்று தெரிவித்தார்.
குட்கா பொருட்கள் வைத்திருந்த குடோனில் ஆய்வு செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்னிமலையை நோக்கி குளிர் பானங்களை ஏற்றி கொண்டு மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. குளிர்பானங்களில் வெயில் படும்படி ஏற்றி வந்த அந்த மினி வேனை உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கலைவாணி பார்த்து உடனடியாக அந்த மினி வேனை தடுத்து நிறுத்தினார். பின்னர் மினி வேனின் மேல் வெயிலில் சூடாகி இருந்த 330 லிட்டர் குளிர்பானங்கள் மற்றும் 180 லிட்டர் தண்ணீர் பாட்டில்களையும் கீழே இறக்கி அதனை தரையில் கொட்டி அழித்தார்.
இவைகளின் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். அதைத்தொடர்ந்து மினி வேனை ஓட்டி வந்தவரிடம், குளிர்பானங்கள், தண்ணீர் கேன்கள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வெயில் படும்படி கொண்டு வருவது தவறு என்றும், முறையாக அதனை வெயில் படாமல் மூடியபடி கொண்டு வர வேண்டும் என்றும் எச்சரித்தார்.