வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடந்தது.

Update: 2018-05-03 22:15 GMT
வேலூர்,

விடைத்தாள்கள் திருத்தும் பணி வேலூர் கிருஷ்ணசாமி பள்ளி, ஆற்காடு ராமகிருஷ்ணா பள்ளி, திருப்பத்தூர் டோம்னிக் சேவியோ மெட்ரிக் பள்ளிகளில் நடந்தது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு சி.டி.யில் பதிவேற்றும் செய்யும் பணிகள் முடிந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆங்கில பாட விடைத்தாள் திருத்தும் பணியும், நேற்று தமிழ் விடைத்தாள் திருத்தும் பணியும் முடிவடைந்தது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்தது. வருகிற 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்