ஆய்வு நடத்திவிட்டு ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தில் வீதிகள் தோறும் சென்று ஆய்வு நடத்திவிட்டு, அங்குள்ள ஆட்டோ டிரைவர் வீட்டில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இரவு உணவை சாப்பிட்டார்.
நாகர்கோவில்,
அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி கிராம தன்னாட்சி திட்டத்தின்படி, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கிராமங்களுக்கு சென்றடைகிறதா? என ஆய்வு செய்யும்படி மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்..
அதன்படி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தில் தடிக்காரன்கோணம், திக்கணங்கோடுபுதூர் ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்தார்.
நாகர்கோவிலை அடுத்த மேலகருப்பு கோட்டை கிராமத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு சென்று ஆய்வு நடத்தினார். வீதிகள் தோறும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என கேட்டறிந்தார். தூய்மை இந்தியா திட்டம் பற்றியும் மக்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து மேலகருப்பு கோட்டையில் உள்ள ஒரு கோவில் முன் அமர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டார்.
பின்னர் இரவில் அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவரின் வீட்டில் பொன்.ராதாகிருஷ்ணன் இரவு உணவை சாப்பிட்டார். அதன்பிறகு இரவில் முருகனின் வீட்டிலேயே தங்கினார். மத்திய மந்திரி தங்கள் ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீட்டில் தங்கியதை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
முன்னதாக கொட்டாரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோவிலுக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், அங்கு அம்மனை தரிசனம் செய்துவிட்டு, கோவிலில் உள்ள ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சற்று நேரம் தியானம் செய்தார்.