பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்; அய்யாக்கண்ணு
கிடப்பில் போடப்பட்ட பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு கூறினார்.;
கூடலூர்,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு நேற்று மாலை 5 மணிக்கு சென்றார். அவர், அந்த பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகளின் நிலை குறித்து சமூக ஆர்வலர்கள், விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்தார். தொடர்ந்து கூடலூர் அருகே உள்ள பாண்டியாறுக்கு சென்றார். அங்கு கூடலூர் பகுதியில் உற்பத்தியாகி இறுதியில் பாண்டியாறு- புன்னம்புழா வழியாக கேரளாவுக்கு பாயும் தண்ணீரை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாடு கட்டி போரடித்தால் மாளாது என எண்ணி காவிரி டெல்டா மாவட்டங்களில் யானை கட்டி போரடிக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. 1892-ம் ஆண்டு 750 டி.எம்.சி. தண்ணீர் விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது. பின்னர் 550 டி.எம்.சி.ஆகவும், 1974-ல் 370-ம், 1992-ல் 205 டி.எம்.சியாகவும், 2007-ம் ஆண்டு 192 டி.எம்.சி. நீரும், 2018-ம் ஆண்டு 177 டி.எம்.சியாகவும் குறைந்து விட்டது.
கர்நாடகாவில் அன்றைய காலத்தில் 90 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நிலம் இருந்தது. இன்றைக்கு விவசாய நிலத்தின் பரப்பளவு பல மடங்கு அதிகரித்து விட்டது. கூடலூர், ஓவேலி, தேவாலா உள்ளிட்ட இடங்களில் பெய்யும் மழையால் ஆண்டுக்கு 160 டி.எம்.சி. தண்ணீர் கேரளா வழியாக வீணாக வழிந்தோடி அரபிக்கடலில் கலக்கிறது. இந்த நீரை அந்த மாநிலமும் பயன்படுத்துவது இல்லை. எனவே கூடலூர் பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீரை தடுத்து பயன்படுத்தினால் 10 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். இதன் மூலம் 20 மாவட்ட மக்களின் குடிநீர் தாகத்தை தணிக்க முடியும்.
நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து அனைத்து விவசாயிகளும் வாழ வழிவகை கிடைக்கும். கூடலூர், ஓவேலி பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீரை தடுத்து மாயார் ஆறு வழியாக பவானிசாகர் அணைக்கு திருப்பி விட வேண்டும். இதேபோல் பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் கூடலூர் அல்லது சென்னை தலைமைச்செயலகம் முன்பு அடுத்த மாதம் (ஜூன்) போராட்டம் நடத்தப்படும். கூடலூர் பகுதியில் தற்போது ஓடும் நீரை கணக்கீட்டால் 10 நாட்களில் 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து விடும். 6 வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்யக்கூடாது என கூறிய நீதிமன்றம் மத்திய அரசின் மனுவை ஏற்று 4 டி.எம்.சி. நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இது நியாயம் இல்லை. குறைந்தது 10 டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும். அப்போது தான் விவசாயத்துக்கு தேவையான நீர் கிடைக்கும்.
இந்த விஷயத்தில் தமிழக அரசு அமைதி காத்து வருகிறது. பாசனத்துக்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி விவசாயிகளை காப்பாற்றுவார் என நாம் அனைவரும் நம்புவோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது போராட்ட குழு தலைவர் பிரகாஷ், பிரசார குழு தலைவர் செல்லபெருமாள், ராஜேந்திரன், மஞ்சை மோகன், சளிவயல் சாஜி, அருண், செங்குட்டுவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.