திருவள்ளூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு முதல் 82 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது
தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு முதல் 82 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்தார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியும், சத்தியவாணிமுத்து நினைவு திட்டத்தின் கீழ் தையல் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி 104 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கமும், 23 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
பெண்களை படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு ஏற்படவே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டில் இருந்து இதுவரை தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மூலம் 82 கிலோ தங்கம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது எல்லாபுரம் ஒன்றியம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆகியவற்றை சேர்ந்த மொத்தம் 104 பயனாளிகளுக்கு 832 பவுன் தங்கத்தை வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி, சமூகநல விரிவாக்க அலுவலர் திருப்பாவை ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைவரையும் ஊர்நல அலுவலர்கள் பத்மா, கலா ஆகியோர் வரவேற்றனர். முடிவில், பானுமதி நன்றி கூறினார்.
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் வேதநாயகம் முன்னிலை வகித்தார். பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஏழை எளிய குடும்பங்களை சார்ந்த பெண்களின் திருமணத்திற்காக அரசு வழங்கும் தாலிக்கு 8 கிராம் தங்கத்தை 144 பயனாளிகளுக்கு வழங்கினார். கலெக்டர் சுந்தரவல்லி 4 பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரங்களை வழங்கினார்.
விழாவில் பொன்னேரி தாசில்தார் சுமதி, கூட்டுறவு சங்க இயக்குனர் பொன்னுதுரை, சமூக நலத்துறை அலுவலர் புஷ்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.