தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் நாட்கள் இணையதளத்தில் வெளியீடு ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் நாட்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் நாட்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள் அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
குடிநீர்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து உறிஞ்சு கிணறுகள் மூலம் உறிஞ்சப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலம் தொடங்கி இருப்பதால், ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. ஆனாலும் மாநகர மக்களுக்கு முறையாக சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இணையதளம்
அதன்படி குடிநீர் வினியோகம் செய்யும் நாட்கள், நேரத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அட்டவணை தயார் செய்யப்படுகிறது. இந்த அட்டவணை மாநகராட்சியின் இணையதளமான www.thoothukudicorporation.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் மேற்படி சேவையை பயன்படுத்தி கோடை காலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.