கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்தது; மோடி-ராகுல் காந்தி இன்று போட்டி பிரசாரம்
மோடி-ராகுல்காந்தி இன்று போட்டி பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
பெங்களூரு,
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கர்நாடகத்தில் இன்று(வியாழக்கிழமை) போட்டி பிரசாரம் மேற்கொள்கிறார்கள். தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கர்நாடகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுவரை 7 முறை கர்நாடகத்திற்கு வந்து பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு இருக்கிறார்.
அதேபோல் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் கர்நாடகத்திற்கு பலமுறை வருகை தந்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியுள்ளார். 2 மாத இடைவெளிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சாம்ராஜ்நகர், உடுப்பி, பெலகாவி ஆகிய மாவட்டங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் பிரதமர் மோடியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று(வியாழக்கிழமை) போட்டி பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் கர்நாடகத்திற்கு வருகிறார். கலபுரகி, பல்லாரி, பெங்களூரு ஆகிய நகரங்களில் பிரசாரம் நடத்த திட்டமிட்டுள்ளார். காலை 11 மணிக்கு கலபுரகியிலும், மதியம் 3 மணிக்கு பல்லாரியிலும், மாலை 6 மணிக்கு பெங்களூரு கெங்கேரி அருகிலும் நடைபெறும் பா.ஜனதா பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசுகிறார்.
ஒரு நாளைக்கு 3 இடங்களில் மோடி பேசுகிறார். ஒருநாள் விட்டு ஒருநாள் என்று மோடி பிரசாரம் மேற்கொள்கிறார். மொத்தம் 5 நாட்களில் 15 கூட்டங்களில் அவர் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். மேலும் 5 கூட்டங்களில் கலந்து கொள்ளவும் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கர்நாடகத்திற்கு வருகிறார். அவர் பீதர், கலபுரகி, கதக், ஹாவேரி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். காலை 11.30 மணிக்கு பீதர் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவுரத் நகருக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
அதனைதொடர்ந்து பால்கி, உம்னாபாத் பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசுகிறார். பின்னர் பஸ்சில் பீதர் செல்லும் ராகுல்காந்தி அங்கு நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதை முடித்துக்கொண்டு ராகுல்காந்தி பீதரில் தங்குகிறார். நாளை(வெள்ளிக்கிழமை) கலபுரகி, ஹாவேரி, கதக் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல்காந்தி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
கர்நாடகத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இன்று ஒரேநாளில் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இதனால் கர்நாடகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துவிட்டது. பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அகில இந்திய தலைவர்கள் கர்நாடகத்திற்கு வருகிறார்கள். அடுத்து வரும் நாட்களில் கோடை வெயிலைவிட அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு அவர்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.