மீனம்பாக்கத்தில் மினிவேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மினிவேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-02 22:45 GMT
ஆலந்தூர்,

சென்னை கிண்டியை சேர்ந்தவர் பக்தவச்சலம்(வயது 35). மினி வேன் டிரைவர். இவர், நேற்று பகல் பல்லாவரத்தில் இருந்து கிண்டிக்கு மினி வேனை ஓட்டி வந்தார். மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்தபோது வேனில் இருந்து திடீரென புகை வந்தது.

இதை கண்ட டிரைவர் பக்தவச்சலம், மினிவேனை சாலையோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அதற்குள் மினிவேன் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இது பற்றி மீனம்பாக்கம் போலீசாருக்கும், தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி மினிவேனில் எரிந்த தீயை அணைத்தனர்.

வேனில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது. இது பற்றி மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் மீனம்பாக்கம் பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்