தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து அதிகாரிகள் தொந்தரவு: என்ஜினீயர் புகார்
விசாரணை என்ற பெயரில் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு அழைத்து அதிகாரிகள் தொந்தரவு செய்கிறார்கள் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் என்ஜினீயர் புகார் அளித்தார்.
கோவை,
கோவை செல்வபுரம் ராஜரத்தினம் நகரை சேர்ந்தவர் பெபின் ரகுமான் (வயது 24). என்ஜினீயர். இவர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தனது பெற்றோருடன் வந்து புகார் மனு அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
என்ஜினீயரிங் படித்து முடித்துள்ள நான் தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த மாதம் 11-ந் தேதி கோவை ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அளித்தனர். அதன்படி நான் ஆஜர் ஆனேன்.
என்னுடைய போன் அழைப்புகள் தொடர்பாக விசாரிக்க வேண்டியது உள்ளது என்று கூறிய என்.ஐ.ஏ. அதிகாரிகள், பாப்புலர் பிரண்ட் அமைப்பு தொடர்பாக என்னிடம் விசாரித்தார்கள். மேலும் அவர்கள் கூறுவது போல் நான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
பின்னர் கடந்த மாதம் 14-ந் தேதியும், 18-ந்தேதியும் ஆஜர் ஆகுமாறு கூறினார்கள். இதற்கு சம்மன் அளிக்கவில்லை. விசாரணையின் போது எனது கருத்தை வீடியோ மூலம் பதிவு செய்தனர். இதனால் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது. மீண்டும் 19-ந்தேதி ஆஜர்ஆகுமாறு கூறினார்கள். சம்மன் வர வில்லையே என்று நான் கேட்டதற்கு, சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர்.
இத்தனை நாள் கோவையில் அழைத்து விசாரணை நடத்தியவர்கள், இப்போது சென்னைக்கு செல்லு மாறு கூறியதால் சென்னைக்கு புறப்பட்டேன். ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருந்ததால் சென்னை அலுவலகத்தில் ஆஜர் ஆகவில்லை.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்னை அவர்களின் தேவைக்கு பகடைக்காயாக பயன்படுத்துகிறார்களோ என்று அச்சம் அடைகிறேன். இதனால் தற்கொலை செய்யும் அளவுக்கு தொந்தரவு செய்கின்றனர். ஆனாலும் பெற்றோரை நினைத்து தற்கொலை முடிவை கைவிட்டேன். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து பெபின் ரகுமான் நிருபர்களிடம் கூறும்போது, ‘எஸ்.டி.பி.ஐ. கட்சியில் உறுப்பினராக இருந்தேன். அதை வைத்து சில அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடர்பாக நான் புகைப்படம் எடுத்ததாகவும், இதை ஒப்புக்கொள்ளுமாறும் என்னிடம் அதிகாரிகள் கூறினார்கள். எந்தவித தவறும் செய்யாத நிலையில் என்னை வேண்டும் என்றே விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள்’ என்றார்.