மக்கள் நலனில் அக்கறை இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள் - பொள்ளாச்சி ஜெயராமன்
மக்கள் நலனில் அக்கறை இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள் என்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெய ராமன் பேசினார்.
கோவை,
கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் பாப்பநாயக் கன்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் நடந்தது. இதற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நா.கருப்புசாமி, மண்டல செயலாளர் சி.டி.சி.சின்னராஜூ, பீளமேடு பகுதி செயலாளர் விமல் சோமு, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் நெடுமாறன், மாவட்ட தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொழிலாளர்களின் ஒற்றுமையை கொண்டாடும் வகையிலும், அவர்களின் உரிமையை, பிரச்சினையை வெளியே கொண்டு வரும் வகையிலும் மே தினம் கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக இருந்தபோது தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை கொண்டு வந்தார்.
அதுபோன்று ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோதும், தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். ஜெயலலிதா வழியில் தற்போது ஆட்சி செய்து வரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழிலாளர்களை மறந்துவிட வில்லை.
சினிமாவில் நடித்து 60 வயதுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அவர்கள் நடித்த படத்தை இனிமேல் மக்கள் பார்க்க மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்ட பிறகு, 2 பேர் அரசியலுக்கு வந்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளதாகவும், அதை நிரப்ப தாங்கள் வந்ததாகவும் அவர்கள் கூறி வருகிறார்கள்.
அவர்கள் எப்போதாவது மக்கள் நலனில் அக்கறை காட்டினார்களா? காவிரி பிரச்சினையில் அவர்கள் எங்கே சென்றனர்? மக்களுக்காக அவர்கள் குரல் கொடுத்தார்களா?. மக்கள் நலனில் அக்கறை இல்லாத அவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியலுக்கு வந்துள்ள நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் விரைவில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.
ஏற்கனவே ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தார். அவர் ஜெயலலிதா தயவில் எதிர்க்கட்சி தலைவரானார். அவர் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டதால் தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரிய வில்லை.
எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா எப்படி கட்சியை காப்பாற்றினாரோ அதுபோன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்லும் ஆகியோர் கட்சியை காப்பாற்றி வருவதுடன், திறமையாக ஆட்சி செய்து வருகிறார்கள். இது ஜெயலலிதா முயற்சியால் கிடைத்த ஆட்சி. அந்த ஆட்சியை சுயநலத்துக்காக ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் நினைத்து வருகிறார். அது ஒருபோதும் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.