அக்ரஹாரசாமக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு காலிகுடங்களுடன் வந்த பெண்கள்

அக்ரஹாரசாமக் குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் காலிக் குடங்களுடன் வந்து பெண்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-05-02 22:15 GMT
சரவணம்பட்டி,

கோவையை அடுத்த எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீரணத்தம், அக்ரஹாரசாமக்குளம், வெள்ளாணைப்பட்டி, வெள்ளமடை, கொண்டையம்பாளையம், கள்ளிப்பாளையம், அத்திப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்ரஹாரசாமக்குளம் ஊராட்சியில் ஈஸ்வரன் கோவில் பகுதியில் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு துணை வட்டார வளர்ச்சி அதிகாரி அம்சவேணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், காலிக்குடங்களுடன் வந்து பெண்கள் கலந்துகொண்டனர். அவர் கள் கூறுகையில், எங்கள் ஊராட்சியில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே எங்கள் கோரிக்கை யை பதிவு செய்ய காலிக்குடங்களுடன் வந்தோம் என்றனர். அவர்களிடம், குடிநீர், சாக்கடை உள்பட பொது சுகாதார பிரச்சினைகளுக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். கிராம சபையில் 10-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொண்டையம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில் சி.எஸ்.ஐ. காலனி, செங்காடு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினை யை தீர்க்க வேண்டும். ஆருவசெட்டிப்புதூர் பகுதியில் மயானத்தை பராமரித்து சுற்றுச்சுவர் கட்டி தகன மேடை அமைக்க வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கீரணத்தம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுக்கழிப்பிடம், மயானத்தை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கள்ளிப்பாளையம், வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மன்ற கூட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். செரயாம்பாளையம் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெள்ளமடை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் குடிநீர் பிரச்சி னையை தீர்க்க வேண்டும். பொது சுகாதார மையம் அமைக்க வேண்டும். சாமநாயக்கன்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

அத்திப்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பொது கழிப்பிடம், கான்கிரீட் சாலை, எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் நகர் பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துடியலூர் அருகே உள்ள அசோகபுரம், குருடம்பாளையம், பன்னிமடை, சோமையம்பாளையம், நஞ் சுண்டாபுரம், சின்னதடாகம், 24.வீரபாண்டி ஆகிய ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற து. இதில் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் மூலம் தகுதி பெற்ற 18 முதல் 35 வயதுடைய இளைஞர்க ளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாடு பயிற்சி அளித்தல், மகளிர் சுய உதவிக்குழு அமைத்து நிதி அளித்தல், தனிநபர் கழிப்பிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டள.

குருடம்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், அடிப்படை வசதி செய்து தரக்கோரியும், சுகாதார நடவடிக்கையை மேம்படுத்தவும், சீரான குடிநீர் வினியோகிக்கவும் கோரிக்கை விடுத்தனர். பன்னிமடை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சாந்தகுமாரி பேசினார்.

சின்னதடாகத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. சின்னதடாகம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி 95 வயது மூதாட்டி நஞ்சம்மாள் என்பவர் மனு கொடுத்தார்.

சூலூர் ஊராட்சி ஒன்றியம் அரசூரில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். அரசூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது, பிரதம மந்திரியின் ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பற்றி விவாதிக்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலாளர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

கலங்கல் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அதிகாரி செவந்தம்மாள் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். முத்துக்கவுண்டன்புதூர் உள்பட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்