ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல 3-வது மாற்றுப்பாதை அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கோடை சீசனையொட்டி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல 3-வது மாற்றுப்பாதை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதால் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், குஞ்சப்பனை, கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையம், பர்லியார், குன்னூர் வழியாகவும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகிறார்கள். கடந்த 2009-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலை மற்றும் கோத்தகிரி-ஊட்டி சாலையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
அப்போது கோவையில் இருந்து கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம், குண்டல்பெட் வழியாக அத்தியாவசிய பொருட்கள் கூடலூருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல 3-வது மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து ஊட்டியில் இருந்து மஞ்சூர், கெத்தை, வெள்ளியங்காடு வழியாக காரமடைக்கு சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
முதல் கட்டமாக ஊட்டியில் இருந்து மஞ்சூருக்கு 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கெத்தை வரை 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை போடப்பட்டது. இந்த சாலை தற்போது போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் உள்ளதால், மஞ்சூரில் இருந்து வாகனங்கள் காரமடை, கோவைக்கு சென்று வருகின்றன. கெத்தையில் இருந்து காரமடைக்கு 34 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பகுதி கோவை மாவட்டத்துக்குட்பட்டதும், வனத்துறை மற்றும் மின்வாரியத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால், 3-வது மாற்றுப்பாதை அமைப்பதற்கு அனுமதி பெற கடுமையான கட்டுப்பாடு இருந்தது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில், அன்றைய நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மஞ்சூர், கெத்தை வழியாக பஸ் போக்குவரத்து உள்ளது. சிறிய அளவிலான பஸ்கள் மட்டுமே அந்த வழியாக செல்ல முடியும். எனவே, சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தினால் அனைத்து வாகனங்களும் கோவைக்கு சென்று வர முடியும் என்று தெரிவித்தார். அந்த கோரிக்கையை ஏற்று 3-வது மாற்றுப்பாதை அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் மூலம் சாலை பணிகள் மற்றும் மேம்படுத்துதல் குறித்த அறிக்கை தயாரிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று அரசிடம் திட்ட அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் இருப்பது தெரியவந்ததால், கெத்தை-காரமடை இடையே சாலை அமைக்க நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டர் சங்கர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 கிலோ மீட்டர் சாலை நிலத்துக்கு பதிலாக 2 மடங்கு நிலத்தை ஊட்டி அருகே சோலூர் பகுதியில் உள்ள வருவாய் நிலத்தை வழங்கினார். மேலும் மின்வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் ரூ.500 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கெத்தையில் இருந்து காரமடை செல்லும் சாலை கோவை மாவட்டத்துக்குட்பட்டதால், கோவை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 3-வது மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்து வருகின்றனர். அதற்கான நிதி ஒதுக்கியும் பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில், ஊட்டி-கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறிய தாவது:-
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வருவதற்கு சாதாரணமாக 2½ மணி நேரம் ஆகும். ஆனால், தற்போது கோடை சீசனையொட்டி 5 மணி நேரமாகிறது. இதனால் எரிபொருள் விரயமாகி அதிக செலவாகிறது. அதேபோன்று ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா வழியாக மேட்டுப்பாளையம் செல்ல அதிக நேரம் பிடிக்கிறது. இதற்கு காரணம் கோடை சீசனுக்கு ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமானதே ஆகும்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழையும், அதனை தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்யும். அப்போது பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். 3-வது மாற்றுப்பாதை அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறையும். எனவே, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 3-வது மாற்றுப்பாதையை அமைக்க நீலகிரி, கோவை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.