காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மன்னார்குடி அருகே கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுந்தரக்கோட்டை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சோழபாண்டியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.
போராட்டத்திற்கு கிராம பிரமுகர்கள் ரவீந்திரன், சக்தி, சங்கர், நடராஜன், ரமேஷ், வீரசிங்கம், ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தை காவிரி உரிமை மீட்புக்குழு தலைமை ஆலோசகர் டாக்டர் பாரதிசெல்வன் தொடங்கி வைத்தார். போராட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேந்திரன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மராஜன் நன்றி கூறினார்.