காவிரி உரிமையை காப்பாற்றக்கூடிய தகுதி அ.தி.மு.க.விற்கு மட்டுமே உண்டு அமைச்சர் பேச்சு
காவிரி உரிமையை காப்பாற்றக்கூடிய தகுதி அ.தி.மு.க.விற்கு மட்டுமே உண்டு என அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.
கும்பகோணம்,
தஞ்சை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் க.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. கும்பகோணம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் கா.அறிவழகன், திருவிடைமருதூர் ஒன்றிய கழக செயலாளர் ஏ.வி.கே.அசோக்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. பெரு நகர கழக செயலாளர் ராம.ராமநாதன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையால் டெல்டா பகுதிகள் வறண்டு போக காரணமாக இருந்தவர் கருணாநிதி. ஆனால் அவரது மகன் மு.க.ஸ்டாலின் காவிரி பிரச்சினைக்காக நடைபயணம், சைக்கிள் பயணம் என ஏதோ, ஏதோ கூறி கொண்டு நாடகம் ஆடுகிறார்.
ஜெயலலிதா நடத்திய சட்ட போராட்டத்தால் தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அதன் தீர்ப்பை அரசிதழிலும் வெளியிட செய்தார். காவிரித்தாய் என்றால் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெய லலிதா தான். எனவே தான் தஞ்சை மாவட்ட விவசாயிகள், ஜெயலலிதாவுக்கு பொன்னியின் செல்வி என பட்டம் வழங்கி கவுரவப்படுத்தினர்.
காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டவர் கருணாநிதி. ஸ்டாலினுக்கு அதை பற்றிய கவலை கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை அ.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உரிமையை மீட்பதற்காக உண்ணாவிரத போராட்டம், மறியல் போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை அ.தி.மு.க நடத்திவருகிறது. ஆனால் மற்றவர்களோ வேடம்போட்டுக்கொண்டு அலைகின்றனர்.
காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர். காவிரி உரிமையை காப்பாற்றக்கூடிய தகுதி அ.தி.மு.க விற்கு மட்டுமே உண்டு. உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக் களை கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில கைத்தறிபிரிவு செயலாளர் லெனின், முன்னாள் நகர் மன்ற தலைவர் (பொ) ராஜா.கே.நடராஜன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் சின்னையன், டாஸ்மாக் பிரிவு செயலாளர் எம்.ஏ.பாண்டியன், அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மத்திய சங்க செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.