நெல்லை மாணவனின் உயிர் தியாகத்திற்கு பிறகாவது தமிழக அரசு மதுபான கடைகளை மூடுவதற்கு முன்வர வேண்டும்
நெல்லை மாணவனின் உயிர் தியாகத்திற்கு பிறகாவது தமிழக அரசு மதுபான கடைகளை மூடுவதற்கு முன் வரவேண்டும் என்று வைகோ கூறினார்.
செம்பட்டு,
நெல்லையில் மாணவர் ஒருவர் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என கோரி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. டாஸ்மாக் மது லட்சக்கணக்கான குடும்பங்களை அழித்து விட்டது. மது அருந்தியவர்களால் பெண் பிள்ளைகள், பூப்பெய்தாத சிறுமிகள் கூட சிதைத்து நாசமாக்கப்பட்டு இருக்கிறார்கள். நெல்லையை சேர்ந்த இந்த மாணவன் தனது குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு மன வேதனை அடைந்து தற்கொலை செய்து இருக்கிறார். தற்கொலை செய்யவும் துணிச்சல் வேண்டும். இது மாதிரி அக்கிரமங்களை எதிர்க்க வாழ்ந்து தான் போராடவேண்டும். தற்கொலை செய்யக் கூடாது.
டாஸ்மாக் மதுக்கடைகள் குடிக்காதவர்களை கூட குடிக்க வைப்பது போல இருப்பதால் தான் அவற்றை மூடவேண்டும் என கோரி எனது தாயார் நூறு வயதில் மதுக்கடைக்கு எதிராக போராடினார். நெல்லை மாணவரின் உயிர் தியாகத்திற்கு பிறகாவது தமிழக அரசு மதுக்கடைகளை மூடுவதற்கு முன்வரவேண்டும்.
நாசகார நீட் தேர்வு
நீட் தேர்வு ஒரு நாசகார திட்டம். நீட் தேர்வு ஒரு அயோக்கியதனம். இந்த தேர்வினால் ஏழை எளிய, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் டாக்டர் கனவு கருகி போய்விடும். நீட் தேர்வே ஒரு அநீதி என்கிறோம். இந்நிலையில் இந்த தேர்வினை எழுத தமிழ்நாட்டை சேர்ந்த பிள்ளைகளுக்கு கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கி இருப்பது கண்டனத்துக்குரியது.
மதுரை ஐகோர்ட்டு தமிழ் நாட்டிற்குள்ளேயே தேர்வெழுத மையம் அமைக்கவேண்டும் என உத்தரவிட்ட பின்னரும் மத்திய அரசு கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. டெல்லி சென்றுள்ள தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நமது மாணவர்கள் தமிழகத்திற்குள் நீட் தேர்வு எழுதுவதற்கான அனுமதியை பெற்று கொடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.