ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் வேலைநிறுத்தம் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் இயக்கினர்
ஒகேனக்கல்லில் லைப் ஜாக்கெட் பற்றாக்குறையை கண்டித்து பரிசல் ஓட்டிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் மீண்டும் பரிசல்களை இயக்கினர்.;
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவர்கள் ஒகேனக்கல் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்தும் மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகள் காவிரியின் அழகை காண பரிசலில் செல்ல, மாவட்ட நிர்வாகம் சார்பில் லைப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது. ஒகேனக்கல்லில் அங்கீகரிக்கப்பட்ட பரிசல்களின் எண்ணிக்கை 416 ஆகும். இதில் 75 பரிசல்களுக்கு மட்டுமே லைப் ஜாக்கெட்டுகள் உள்ளன.
சாதாரணமான நாட்களில் ஒகேனக்கல்லில் தினசரி 100-க்கும் மேற்பட்ட பரிசல்கள் இயக்கப்படும். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அனைவரும் பரிசலில் சவாரி சென்று காவிரியின் அழகை காண ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப லைப் ஜாக்கெட்டுகள் இல்லாததால், பரிசல் ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கூடுதல் லைப் ஜாக்கெட்டுகள் வழங்காத அதிகாரிகளை கண்டித்து நேற்று காலை 8 மணி முதல் பரிசல் ஓட்டிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று ஒகேனக்கல்லின் இயற்கை அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழியின் நேர்முக உதவியாளர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணகுமார், தாசில்தார் சேதுலிங்கம், ஒகேனக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பரிசல் ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பரிசல் ஓட்டிகள் தரப்பில் கூடுதல் லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும். ஊட்டமலையில் இருந்து பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும். சிறுவர் பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதை பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைக்கேட்ட அதிகாரிகள், இது குறித்து கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பரிசல் ஓட்டிகள், வேலை நிறுத்தத்தை கைவிட்டு, மதியம் 1 மணியளவில் மீண்டும் பரிசல்களை இயக்க தொடங்கினர். இதன் பிறகு சுற்றுலா பயணிகள் பரிசல்களில் காவிரி ஆற்றில் சென்று ஒகேனக்கல்லின் இயற்கை அழகை ரசித்து சென்றனர்.