டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்

டாஸ்மாக் கடை இருப்பதால் தெருக்களில் விபத்துகளும், சண்டைகளும் அடிக்கடி ஏற்படுவதாக கூறி, அந்த பகுதி மக்கள் டாஸ்மாக்கடையை அகற்ற வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினர்.

Update: 2018-05-02 22:30 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறையில், டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை இருப்பதால் தெருக்களில் விபத்துகளும், சண்டைகளும் அடிக்கடி ஏற்படுவதாக கூறி, அந்த பகுதி மக்கள் டாஸ்மாக்கடையை அகற்ற வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் உறுதியளித்தபடி டாஸ்மாக்கடை அகற்றப்படவில்லை. இதனைத்தொடர்ந்து நேற்று தொண்டமாந்துறையை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் ஒன்று திரண்டு டாஸ்மாக்கடை முன்பு சீமை கருவேல முட்கள் வெட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, வேப்பந்தட்டை தாசில்தார் பாரதிவளவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 2 நாட்களில் டாஸ்மாக்கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்