குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்த வாலிபர் மீது தாக்குதல்
ஆரணி அருகே குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்த வாலிபரை, பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காமக்கூர்பாளையம் கிராமத்தில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் குழந்தைகளை கடத்துவதற்காக பிஸ்கெட் கொடுக்கிறார் என நினைத்து அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார். மேலும் அவர், தஞ்சாவூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அவருக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீஸ்காரர் ஒருவர், அவரை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் சென்றார்.