வள்ளியூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற ரவுடி கைது

வள்ளியூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-05-01 23:46 GMT
வள்ளியூர்,

வள்ளியூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பாட்டிலால் குத்தி கொல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமையா மகன் கணேசன் என்ற கட்ட கணேசன்(வயது 37). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருக்கின்றன.

இந்த நிலையில், நேற்று வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சச்சீவ் தலைமையில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது ரெயில்வே நிலையம் பகுதியில் கேனில் வைத்து சாராயம் விற்று கொண்டிருந்த கணேசனை சப்-இன்ஸ்பெக்டர் சச்சீவ் கைது செய்ய முயன்றார்.

இதில் ஆத்திரமடைந்த கணேசன், உடைந்த மது பாட்டிலால் சச்சீவை குத்தி கொல்ல முயன்றார். சுதாரித்துக் கொண்டு அவர் தப்பினார். பின்னர் கணேசனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை உடைந்த பாட்டிலால் ரவுடி குத்தி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்