அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது

திருவள்ளூர் அருகே மது குடிக்க பணம் தராததால் அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-01 23:42 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர், காருண்யா நகரில் வசித்து வருபவர் கவுரி. இவரது மகன்கள் சரவணன் (வயது 27), தங்கபாண்டியன் (24). இவர்களில் சரவணன் ராயபுரத்தில் கூலி வேலையும், தங்க பாண்டியன் புளியந்தோப்பில் நகராட்சி துப்புரவு பணியாளராகவும் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு அண்ணன்-தம்பி இருவரும் வேலை செய்து வீட்டு வீட்டுக்கு வந்தனர். மது குடிக்க பணம் தருமாறு அண்ணன் சரவணனிடம் தங்கபாண்டியன் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து கண்டித்தார்.

இதனால் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக உருவானது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த தங்கபாண்டியன் வீட்டில் இருந்த கத்தியால் சரவணனின் மார்பில் குத்தினார்.

இதில் பலத்தகாயம் அடைந்த அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க பாண்டியனை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்