பணி ஓய்வு பெற்ற டிரைவரை பின்னால் உட்கார வைத்து கார் ஓட்டிய கலெக்டர்
கரூரில் பணி ஓய்வு பெற்ற டிரைவரை பின்னால் உட்காரவைத்து கலெக்டர் கார் ஓட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனுக்கு கார் டிரைவராக பணியாற்றி வந்தவர் பரமசிவம். இவர் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். தனது கார் டிரைவர் பணி ஓய்வை பாராட்டும் விதமாக கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாராட்டு விழாவுக்கு கலெக்டர் அன்பழகன் ஏற்பாடு செய்தார். விழாவில் கலெக்டர் அன்பழகன் பேசியதாவது:-
கடந்த 35 ஆண்டுகளாக வாகன டிரைவராக பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்று செல்லும் இவரது பணி பாராட்டுக்குரியது. எப்படி மகாபாரதத்தில் இறைவனான கண்ணபிரானே அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து வழிநடத்தினாரோ அவ்வாறே வாகன ஓட்டுனர்கள் அதிகாரிகளை மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்கி பாதுகாப்பான பயணம் அமைய உதவுகின்றனர்.
மேலும் உரிய நேரத்தில் சாலை விதிகளை மதித்து இரவு- பகல் பாராமல் பயணம் சிறக்க உதவுகின்றனர். அவ்வாறு உதவியாக இருந்த டிரைவர் பரமசிவத்திற்கு ஒருநாள் நானே அவருக்கு டிரைவராக இருந்து வழியனுப்பிவைக்கிறேன். அனைத்து டிரைவர்களின் சேவை மிகுந்த பணியினை பாராட்டுகிறேன்.
விழாவில் பரமசிவம், அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழா முடிந்ததும் டிரைவரிடம் இருந்து கார் சாவியை கலெக்டர் அன்பழகன் வாங்கினார். டிரைவர் பரமசிவம், கலெக்டர் காரை தான் ஓட்டுவதாக கூறினார். ஆனால் கலெக்டர் அன்பழகன் மறுத்து தான் ஓட்டுவதாக கூறி காரில் பரமசிவத்தையும், அவரது மனைவியையும் பின்னால் அமரவைத்தார். காரை கலெக்டரே ஓட்டி காந்திகிராமத்தில் உள்ள டிரைவரின் வீட்டிற்கு சென்றுஅவர்கள் இருவரையும் இறக்கி விட்டார். மேலும் அவரது வீட்டில் தேனீர் அருந்தி குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். கலெக்டரின் இந்த மனிதாபிமானமிக்க செயலை கண்டு அங்கிருந்தவர்களும், டிரைவர் பரமசிவத்தின் குடும்பத்தினரும் நெகிழ்ச்சி அடைந்தனர். டிரைவரின் வீட்டில் இருந்து கலெக்டர் திரும்பிய போது மாற்று டிரைவர் காரை ஓட்டினார்.
கலெக்டர் அன்பழகன் அவ்வப்போது மனிதாபிமானமிக்க செயலை செய்துவருகிறார். இவரது செயலை பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். மற்ற அலுவலர்களுக்கு ஊக்கமாக இருப்பதாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.