கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் - கனிமொழி எம்.பி.
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி,
தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி. கன்னியாகுமரியில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார். அவரை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். 3-வது அணி அமைப்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மாநில உரிமைகள் குறித்த கூட்டம் தான். கூட்டணி பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். இதுகுறித்து வேறு எந்த கற்பனையும் வேண்டாம்.
மாநில உரிமைகள் எல்லாம் தி.மு.க. ஆட்சியில் தான் விட்டுக் கொடுக்கப்பட்டதாக தம்பிதுரை கூறி இருக்கிறார். சரித்திரத்தின் பக்கத்தை தம்பிதுரை புரட்டி பார்க்க வேண்டும். கல்வி மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாறியது அ.தி.மு.க. ஆட்சியில்தான். மாநில உரிமைகள் பறிபோனது அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில்தான். காவிரி பிரச்சினையில் பிரதமரை சந்திப்பது குறித்து முதல்-அமைச்சர் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும். மக்களுக்கு அரசு தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.