தூத்துக்குடியில் 4 கிராம சபை கூட்டங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானம்

தூத்துக்குடியில் நடந்த 4 கிராம சபை கூட்டங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-05-01 23:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி அனைத்து பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. அதன்படி தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் தாளமுத்துநகர் பாலதண்டாயுதநகரில் நடந்தது. கூட்டத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் நிலம், நீர் மற்றும் காற்று மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோன்று தெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திலும், பூவானியிலும், ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டங்களிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 4 கிராமங்களில் நடந்த கிராமசபை கூட்டங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, கிராமசபையில் வழக்கமான பொருள்கள் குறித்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு பொருள் மீதும் முறையாக விவாதித்து, அதிகாரிகள் உள்பட அனைவரும் கையெழுத்திடும் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாக ஏற்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்