புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஊர்வலம்
மே தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஊர்வலம் சென்றனர். மேலும் சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபாடு நடத்தினர்.
புதுக்கோட்டை,
சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்களில் சார்பில் மே தினத்தையொட்டி நேற்று புதுக்கோட்டையில் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் பழைய பஸ் நிலையத்தில் தொடங்கி, பழைய மருத்துவமனை, அண்ணாசிலை வழியாக சின்னப்பா பூங்காவில் நிறைவுபெற்றது. தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சிங்கமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரை மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முகமதலிஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் ஜியாவுதீன் கட்சி கொடியேற்றினார். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்து ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிளைகளிலும் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி மே தினத்தை கொண்டாடினார்கள். சி.ஐ.டி.யு. இணைப்பு சங்கங்களான கட்டுமானம், முறைசாரா, ஆட்டோ, தையல், கூட்டுறவு, பஞ்சாலை, அனைத்து போக்குவரத்து, உள்ளாட்சி உள்பட பல்வேறு சங்கங்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் சி.ஐ.டி.யு. கொடியேற்றி மே தினத்தை கொண்டாடினார்கள். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட சுமை பணியாளர் சங்கம், அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சங்கத்தின் பலகைக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து, வழிபாடு நடத்தினார்கள். தொடர்ந்து தங்களது வேலைக்கு பயன்படுத்தும் சைக்கிள் ரிக்ஷாவிற்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி, தங்களது வேலையை தொடங்கினார்கள். இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதியில் சி.ஐ.டி.யு. சார்பில் மே தின ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பக்ருதீன் தலைமை தாங்கினார். பொன்னமராவதி காந்தி சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் குமார், சி.ஐ.டி.யூ. மாவட்டக்குழு தீன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலச்செயலாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விராலிமலையில் மே தினத்தையொட்டி இருசக்கர வாகனம்- பழுது நீக்குவோர் சங்கத்தினர் சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விராலிமலை சோதனைசாவடியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கடைவீதி, காமராஜர் நகர், அருண்கார்டன் வழியாக சென்றது.