அலங்காநத்தத்தில் கிராம சபை கூட்டம்
அலங்காநத்தத்தில் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் பங்கேற்று நடத்தினா்.
எருமப்பட்டி,
எருமப்பட்டி ஒன்றியம் அலங்காநத்ததில் நேற்று கிராமசபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் மாலதி, எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், கோமதி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்தவ அலுவலர் டாக்டர் சேகரன், சேந்தமங்கலம் தாசில்தார் பிரகாஷ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மணிவண்ணன், ஒன்றிய பொறியாளர் சாந்தி, மண்டல அலுவலர் பூங்கொடி, அலங்காநத்தம் கால்நடைத்துறை டாக்டர் செந்தில்குமார், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.