கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி கூலி தொழிலாளி படுகாயம்
கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் கூலி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை, மாமரம், செம்மனாரை, தாளமுக்கை, மேல்கூப்பு, கீழ்கூப்பு உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களில் ஏராளமான பலாப்பழ மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த மரங்களில் உள்ள பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இந்த கிராமங்களுக்கு வருவதும், காட்டு யானைகள் தாக்கி பொதுமக்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாக உள்ளது.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மாமரம் கிராமம் சுண்டப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சுந்தர் (வயது 35) என்பவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டு யானை ஒன்று சுந்தரை துதிக்கையால் தாக்கியது. சிறிது நேரம் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை அதன்பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த சுந்தர் மயங்கி விழுந்தார். அதிகாலை மயக்கம் தெளிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.