பாப்பான் சத்திரம் சுடுகாட்டில் திறந்த வெளியில் பிணங்கள் எரிப்பு
பாப்பான் சத்திரம் பகுதியில் சுடுகாட்டில் திறந்த வெளியில் பிணங்கள் எரிக்கப்படுகிறது. எனவே பழுதடைந்துள்ள தகன மேடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி ஒன்றியம் செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பாப்பான் சத்திரம். இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களின் உடல்கள் அருகில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் மற்றும் தகனம் செய்கின்றனர்.
ஆனால் இந்த சுடுகாடு சுற்றிலும் சுற்றுச்சுவர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமலும் திறந்தவெளியாக இருந்து வருகிறது. பாப்பான்சத்திரம் பகுதியில் உள்ளவர்கள் யாராவது இறந்து போனால் இங்குள்ள சுடுகாட்டில்தான் கொண்டு வந்து இறுதிச்சடங்கு செய்கின்றோம். ஆனால் இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் உள்ளது.
குறிப்பாக சுடுகாட்டை சுற்றிலும் சுற்று சுவர் ஏதும் இல்லை. இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் எரிமேடை மிகவும் பழுதடைந்த நிலையில் 4 பகுதியிலும் இடிந்து விழும் நிலையில் தூண்கள் மட்டுமே உள்ளது. மேற்கூரை இல்லை. இதனால் திறந்த வெளியில் பிணங்களை எரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மழை நேரத்தில் இறந்தவர்களின் உடலை எரிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுவது மட்டுமல்லாமல், இறுதிச்சடங்கு செய்வதில் மிகுந்த கால தாமதமும் ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சுடுகாட்டில் கொண்டு வந்து கொட்டப்படுவதால் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது.
குப்பைகளை தரம் பிரிக்க இங்கு குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு குப்பைகள் தரம் பிரிப்பது இல்லை. முட்புதர்கள் அதிகளவில் மண்டி கிடப்பதால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
தேவை இல்லாத திட்டங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அரசு பணத்தை வீணாக செலவு செய்து வருகின்றனர். ஆனால் மனிதன் இறுதியில் அடக்கம் செய்ய வேண்டிய சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் செய்யாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய வந்த தமிழக கவர்னரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரையும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் இந்த சுடுகாட்டை அரசு அதிகாரிகள் சீரமைக்க காலதாமதம் ஏற்பட்டால் சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.