கேரள லாரிகளை சிறைபிடித்து குமரி டிரைவர்கள் போராட்டம்
கல்குவாரிகளில் இருந்து பாரம் ஏற்றி சென்ற கேரள லாரிகளை சிறைபிடித்து குமரி டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
குமாரபுரம்,
கல்குவாரிகளில் இருந்து பாரம் ஏற்றி சென்ற கேரள லாரிகளை சிறைபிடித்து குமரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
குமாரபுரம் அருகே வலியாற்றுமுகம், காயல்கரை போன்ற பகுதிகளில் சுமார் 13 கல்குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவு லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜல்லி, பாறை பொடி, கருங்கற்கள் போன்றவை கேரள லாரிகளுக்கு விலை குறைவாக கொடுப்பதாகவும், தமிழக லாரி ஓட்டுனர்களிடம் இருந்து அதிக விலை வாங்குவதாகவும் தெரிகிறது. மேலும், கேரளாவுக்கு பொருட்களை கொண்டு செல்ல பாஸ் வழங்குவதுடன், உள்ளூர் வாகனங்களை அதிக நேரம் காத்திருக்க வைப்பதாக குமரி லாரி டிரைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கல்குவாரிகளின் இத்தகைய செயல்பாடுகளை கண்டித்து, இந்த பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், உள்ளூர் லாரி டிரைவர்கள் சித்திரங்கோடு, வலியாற்றுமுகம் ஆகிய பகுதிகளில் கூடி, கல்குவாரிகளில் இருந்து பாரம் ஏற்றி சென்ற கேரள லாரிகளை சிறைபிடித்தனர். மேலும், மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினர் சித்திரங்கோடு மற்றும் வலியாற்றுமுகம் பகுதிகளுக்கு சென்று லாரி டிரைவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி, கல்குளம் தாசில்தார் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக கூறி அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.