தொழிலாளர் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்ப்போம் - நாராயணசாமி உறுதி
தொழிலாளர் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை உறுதியாக எதிர்ப்போம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி மே தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
புதுச்சேரி,
மே தினத்தையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மே தினம் தொழிலாளர்களின் உழைப்பை உயர்த்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. பிரெஞ்சு புரட்சியின் மூலமாக 8 மணிநேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் என்ற குரல் உலகெங்கிலும் ஒலித்து தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தின் அடிப்படையில் வெற்றிகண்ட நாள்தான் மேதினம். பிரெஞ்சு புரட்சியின் அடிப்படையில் புதுச்சேரியிலும் தொழிலாளர்களின் வேலைநேரம் 8 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த உலகம் இடையறாது இயங்கவும், உலக மக்களின் வாழ்க்கை நிலை மேம்படவும் காரணியாக இருப்பவர்கள் உழைப்பாளர்கள் ஆவர். தங்களின் குருதியினையே வியர்வையாக சிந்தி உழைக்கும் அவர்களின் பணிக்கு ஈடேதும் இவ்வுலகினில் இல்லை என்றால் அது மிகையாகாது. உழைக்கும் வர்க்கம் ஓய்வெடுத்தால் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்காது. ஒவ்வொரு துறையிலும் அவர்களின் பங்களிப்பு மகத்தானது.
ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால் அதன் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது தொழிலாளர் வர்க்கமே. மாநிலத்தின் முதுகெலும்பாக விளங்கும் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பது அரசின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். எனவேதான் நம் புதுச்சேரி அரசு பல தொழிலாளர் நல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
தொழிலாளர்கள் தங்களின் உழைப்பு அவர்களின் குடும்ப நலனுக்காவது மட்டுமல்ல. அது மாநில வளர்ச்சியின் அச்சாரம் என்பதையும் மனதில் நிறுத்தி அரும்பாடுபட வேண்டும். தொழிலாளர்களின் எதிர்கால நலன்கருதி அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்து அவற்றை முழுமையாக பயன்படுத்தி தங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் உறுதியோடு எதிர்ப்போம் என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சபாநாயகர் வைத்திலிங்கம் விடுத்துள்ள செய்தியில், உழைப்பவர்கள் அனைவரையும் உயர்த்தவும், உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரிய பலன்கள் கிடைக்கும் சூழ்நிலைகளை உருவாக்கவும் பாடுபட உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள செய்தியில், இந்திய தேசத்தில் பெரும்பாலும் அமைப்புசாரா தொழிலாளர்கள்தான் அனுதினமும் உழைத்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறார்கள். அவர்களின் பணி பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகின்ற ஒப்பற்ற தலைவராக ராகுல்காந்தி திகழ்ந்து வருகிறார் என்றும் கடமைகளை செய்து உரிமைகளை பெறுகின்ற அமைப்புசாரா தொழிலாளர்களை உள்ளடக்கிய அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாம் இன்னாளில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
இதேபோல் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., அம்மா மக்கள் முன்னேற்ற கழக சுத்துக்கேணி பாஸ்கரன், என்.ஆர்.காங்கிரஸ் பஞ்சாலை தொழிற்சங்க தலைவர் சத்தியசீலன் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.