சேலம் கலெக்டர் தலை மீது செருப்பை வைக்க முயன்ற நபரால் பரபரப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் கலெக்டர் தலை மீது செருப்பை வைக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் கலெக்டர் ரோகிணி தலை மீது செருப்பை வைக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர் ரோகிணி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
அப்போது, 55 வயது மதிக்கத்தக்க ஒருவர், கலெக்டரிடம் மனு கொடுப்பதுபோல், சென்று திடீரென தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி கலெக்டர் தலை மீது வைக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர், அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று விலகி சென்றார். அப்போது, அந்த நபர் கலெக்டர் அருகே இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரின் தலையில் செருப்பை வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆவேசம் அடைந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினர்.
போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் செருப்படி சித்தர் என்றும், பொதுமக்களை செருப்பால் அடித்து ஆசீர்வாதம் செய்வேன் என்றும், கலெக்டரை செருப்பால் ஆசீர்வாதம் செய்வதற்காக வந்தேன் என்றும் கூறினார். இதையடுத்து அவரை போலீசார் மேலும் விசாரிப்பதற்காக ஆட்டோவில் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, அந்த நபர் தனது பெயர் ஆறுமுகம் என்றும், ஐ.நா.சபையில் உறுப்பினராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால் அவர் உண்மையிலேயே ஐ.நா.சபையில் உறுப்பினராக உள்ளாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? என டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எந்த ஊர்? எதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் கலெக்டர் தலை மீது செருப்பை வைக்க முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.