கணக்கில் வராத பணம்-நகை இதுவரை ரூ.24½ கோடி அளவுக்கு பறிமுதல்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இதுவரை ரூ.24½ கோடி அளவுக்கு கணக்கில் வராத பணம்-நகை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கடந்த 2013 தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்டதைவிட 3 மடங்கு அதிகம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. கர்நாடக சட்ட சபைக்கு மே 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனைகளில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது.
“கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக வருமான வரித்துறையினர் ரூ.4.97 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3.41 கோடி மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்திருந்தனர்.
ஆனால் இந்த சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் நேற்று வரை வருமான வரித்துறையினர் கணக்கில் வராத ரூ.19.69 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த முறை வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது 3 மடங்கு அதிகரித்து உள்ளது. இது வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பணம் ஆகும். இது மட்டுமின்றி ரூ.4.81 கோடி மதிப்புள்ள நகைகளையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் இருக்கின்றன. வருமான வரித்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். முதல் முறையாக கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருமான வரித்துறையினர் ஒரு குழுவை நியமனம் செய்து, கண்காணித்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29-ந் தேதி வருமான வரித்துறையினர் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர் வீட்டில் சோதனை நடத்தினர்.
அந்த வேட்பாளர் தங்களுக்கு ரூ.18 கோடி சொத்து இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருந்தார். ஆனால் அந்த சோதனையின்போது அவருக்கு ரூ.191 கோடி சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வேட்பாளரின் அடையாளத்தை வருமான வரித்துறையினர் பகிரங்கப்படுத்தவில்லை. அந்த வேட்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
2012-13-ம் ஆண்டில் இருந்து அந்த வேட்பாளர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு வருமானம் இருப்பதாக அந்த வேட்பாளர் கூறி இருக்கிறார். வருமான வரித்துறை ஆன்லைன் பக்கம் செயல்படாததால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று அந்த வேட்பாளர் கூறி இருக்கிறார். மேலும் தானே தனது வருமானத்தை மதிப்பிட்டு வருமான வரி தாக்கல் செய்து இருக்கிறார்.
இணையதளத்தில் வருமான வரித்துறை பக்கம் செயல்படவில்லை என்று அவர் கூறியது தவறானது. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் அவர் கூறியுள்ள சொத்து மற்றும் வருமான வரித்துறைக்கு காட்டிய சொத்துக்கு நிறைய வித்தியாசம் உள்ளது. அதே போல் பெங்களூரு, மைசூரு, தாவணகெரே ஆகிய மூன்று இடங்களில் கட்டிட ஒப்பந்தாரர்கள் 3 பேரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்த ஒப்பந்ததாரர் சில வேட்பாளர்களுக்கு நிதி உதவி செய்து வந்தார்.
32 மணி நேர சோதனைக்கு பிறகு அவருடைய வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.4.01 கோடி ரொக்கம் மற்றும் 6½ கிலோ தங்க நகைகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. மேலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாக போலியான முறையில் தயார் செய்யப்பட்டு இருந்த ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.