திருப்புவனம் அருகே வரதட்சணை கேட்டு பெண் எரித்துக் கொலை
திருப்புவனம் அருகே வரதட்சணை கேட்டு மண்எண்ணெயை ஊற்றி பெண் எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர், கொழுந்தன் கைதுசெய்யப்பட்டனர்.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்தல். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 35). இவருக்கும், திருப்பாச்சேத்தி அருகே மாத்தூர் கிராமத்தை சேர்ந்த பஞ்சவர்ணம் மகள் முத்துலட்சுமி(30) என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது முத்துலட்சுமி குடும்பத்தினர் நகை, பணம், சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுத்திருந்தனர். தற்போது அவர்களுக்கு 2 வயதில் செல்வகுமார் என்ற மகன் உள்ளான். இதற்கிடையில் கடந்த ஓராண்டாகவே கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் கூடுதல் வரதட்சணை கேட்டு முத்துலட்சுமியை பத்மநாபன் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த வாரம் ரூ.1 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு முத்துலட்சுமியை மிரட்டியுள்ளார். அவர் கொடுக்காததால் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பத்மநாபன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து முத்துலட்சுமி மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்த முத்துலட்சுமி அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். மனைவியை, கணவனே எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முத்துலட்சுமி தாயார் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பத்மநாபன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது சகோதரர் சோமசுந்தரம் ஆகியோரை கைதுசெய்தார். மேலும் அவர்களது தாயார் சகுந்தலா, சோமசுந்தரம் மனைவி சகுந்தலா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றார்.