2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் தீயணைப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தீக்குளிப்பு முயற்சிகளை தடுப்பதற்காக, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மணல் மூட்டைகள், சாக்கு மற்றும் 2 பேரல்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் பரிசோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கின்றனர்.
இந்தநிலையில் ஒரு பெண் 2 குழந்தைகளுடன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். முதலில் குழந்தைகள் மீது மண்எண்ணெயை ஊற்றிய அந்த பெண், பின்னர் தன் மீதும் ஊற்றினார். இதனை பார்த்த போலீசார் ஓடிச்சென்று அந்த பெண்ணிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில் அவர்கள், குள்ளனம்பட்டியை சேர்ந்த முத்துராமன் என்பவரின் மனைவி மணிமேகலை (வயது 33), அவர்களுடைய குழந்தைகள் சந்தோஷ் (9), சஞ்சனா (7) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மாவட்ட வருவாய் அலுவலர் வேலுவிடம் மனு கொடுக்க போலீசார் அழைத்து சென்றனர்.
அவர் கொடுத்த மனுவில், எனது கணவர் குடும்ப பிரச்சினை காரணமாக என்னை தினமும் அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால் அவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். நான் கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைக்கிறேன்.
இந்தநிலையில் இரவு நேரத்தில் எனது கணவர், வீட்டுக்குள் புகுந்து பணத்தை எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் என்னையும் அடித்து துன்புறுத்துகிறார். இதற்கு எனது அண்ணன் மற்றும் அவருடைய மனைவியும் உடந்தையாக உள்ளனர். இதுகுறித்து போலீஸ் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக வருவாய் அலுவலர் உறுதி அளித்தார்.