விருதுநகரில் விபத்து: கார் தீப்பிடித்து தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் உடல் கருகி சாவு
விருதுநகர் அருகே மரத்தில் மோதி கார் தீப்பிடித்து எரிந்ததில் தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் உடல் கருகி பலியாகினர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே வெள்ளூரைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 51). மாவட்ட தி.மு.க. பிரதிநிதி. சிவகாசி பஞ்சாயத்து யூனியன் கவுன் சிலராகவும் பதவி வகித்துள்ளார். இவரது மனைவி ராமலட்சுமியும் சிவகாசி யூனியன் கவுன்சிலராக இருந்துள்ளார்.
நேற்று மதியம் பாண்டியராஜூம், அவரது நண்பர் திருத்தங்கல் ஆலாவூரணியைச் சேர்ந்த பன்னீர்செல்வமும் காரில் எம்.புதுப்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் அதே காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
காரை பாண்டியராஜ் ஓட்டிச் சென்றார். லட்சுமியாபுரம்-வெள்ளூர் சாலையில் குமராபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கி பனை மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன் பக்கத்தில் தீப்பிடித்தது.
இதில் பாண்டியராஜூம், பன்னீர்செல்வமும் காருக்கு உள்ளேயே சிக்கி கொண்டதால் தீயில் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். கார் தீப்பிடித்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
விபத்து குறித்து தகவலறிந்த ஆமத்தூர் போலீசார் விரைந்து வந்து காரின் முன்பகுதியை உடைத்து கருகி கிடந்த இருவரது உடலையும் மீட்டனர். இது பற்றி ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.