திண்டிவனம் அருகே வேன்-2 கார்கள் அடுத்தடுத்து மோதல்; 2 வாலிபர்கள் பலி
திண்டிவனம் அருகே வேன் 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் ஒருவருக்கொருவர் முந்தி சென்றதில் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பலியானார்கள்.
திண்டிவனம்,
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் சைதன்யா ஈஸ்வரன் (வயது 27). இவர் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் ராமேஸ்வரத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் அங்கிருந்து அதே காரில் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை கெருகம்பாக்கம் சக்கரபாணி நகரை சேர்ந்த மணி மகன் முரளி(38) என்பவர் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் சென்றுவிட்டு, சென்னைக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது இவர்கள் இருவரும் திண்டிவனத்தை கடந்து சென்ற போது, யார் முன்னால் செல்வது என்பதில் போட்டி உருவானதாக தெரிகிறது. இதனால் ஒருவரையொருவர் காரில் முந்தி சென்றபடி இருந்துள்ளார்கள். பூச்சிகொளத்தூர் என்கிற இடத்தில் வந்த போது, சைதன்யா ஈஸ்வரன் தனது காரை முரளியின் காருக்கு முன்னால் சென்று நிறுத்தினார். தொடர்ந்து முரளியும் காரை நிறுத்தினார். தொடர்ந்து சைதன்யா ஈஸ்வரன், அவருடன் வந்த சுப்பாராவ் மகன் வெங்டேஸ்வரர்(26) ஆகியோர் காரில் இருந்து இறங்கி, முரளியிடம் சென்று வாக்குவாதம் செய்தனர். இருதரப்பினரும் சாலையோரம் நின்று தகராறு செய்து கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில், அதே மார்க்கத்தில் சென்னையை நோக்கி வந்த வேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முரளியின் கார் மீதும், வெங்கடேஸ்வரர் மீதும் மோதிவிட்டு நடுரோட்டில் கவிழ்ந்தது. இதற்கிடையே வேன் மோதிய வேகத்தில் முரளியின் கார் முன்னோக்கி சென்றதில் இருகார்களுக்கு இடையே நின்று பேசிக்கொண்டிருந்த சைதன்யா ஈஸ்வரன் மற்றும் அவரது கார் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்வாறு அடுத்தடுத்து நடந்த விபத்தில் வெங்கடேஸ்வரர், சைதன்யா ஈஸ்வரன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதையறிந்த அவரது உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த காரில் இருந்த முரளி, அவருடன் வந்த சுரேஷ், சுரேசின் மனைவி நித்யா(30), சுரேசின் தம்பி பாக்கியராஜ்(25) ஆகியோர் காயமடைந்தனர். சைதன்யா ஈஸ்வரன் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினார்கள். விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், சிறப்பு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த முரளி, சுரேஷ் உள்பட 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து பலியான வெங்கடேஸ்வரர், சைதன்யா ஈஸ்வரன் ஆகியோரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய வேனில் வந்த அனைவரும் வேனை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனால் அதில் வந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய விவரம் போலீசாருக்கு கிடைக்கவில்லை. மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, அந்த பகுதியில் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.