ஆட்டோ உரசியபடி சென்றதை தட்டிக்கேட்ட வாலிபர் கொலை
காஞ்சீபுரம் அருகே ஆட்டோ உரசியபடி சென்றதை தட்டிக்கேட்டதால் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவருடைய அண்ணன் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சீபுரம்,
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன்கள் ஜெயசீலன் (வயது 29), பாரிவளவன் (27). இவர்கள் இருவரும் சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் அண்ணன்- தம்பி இருவரும் காஞ்சீபுரம் அடுத்த ஏனாத்தூரில் உள்ள தங்களது சித்தி வீட்டுக்கு வந்தனர். பின்னர் இரவு மேடவாக்கத்துக்கு திரும்பிச் சென்றனர்.
அவர்கள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு ஆட்டோ அவர்கள் மீது உரசியபடி சென்றது. அதனை அண்ணன்-தம்பி இருவரும் தட்டிக்கேட்டனர். இதனால் இவர்களுக்கும், ஆட்டோ டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்களில் வந்த ஆட்டோ டிரைவரின் நண்பர்கள், தட்டிக்கேட்ட ஜெயசீலன், பாரிவளவன் இருவரையும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பாரிவளவன், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஜெயசீலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான பாரிவளவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.