ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான புகார்கள் அனைத்தும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன - கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான புகார்கள் அனைத்தும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.
தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான புகார்கள் அனைத்தும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராது. மணிமுத்தாறு அணையில் 77 அடிக்கு அதிகமாக தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே குடிநீர் பிரச்சினை வர வாய்ப்பு இல்லை. விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு வரலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் இடையிடையே பெய்த மழையால் அந்த சந்தேகமும் தற்போது இல்லை. ஆனாலும் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக வாரம் தோறும் ஆய்வு நடத்தி வருகிறேன். இது தவிர குளங்களை தூர்வாருதல், டெங்கு தடுப்பு போன்ற பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம் அணை பகுதியில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தில் (20 எம்.ஜி.டி.) தற்போது 5 எம்.ஜி.டி.க்கு குறைவாகவே தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை தற்போது செயல்படாததால் அந்த ஆலைக்கு தண்ணீர் தேவைப்படாது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதியை ஏற்கனவே பெற்று உள்ளது. அது போன்று ஆலை அமைப்பதற்கான அனுமதியையும் முறையாக பெற்று உள்ளது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்து உள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.