விளாத்திகுளம் அருகே, கண்மாயில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 3 சிறுவர்கள் பலி
விளையாட சென்றபோது கண்மாயில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் பரிதாபமாக பலியாயினர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே விளையாடச் சென்றபோது கண்மாயில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் பலியானார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடியைச் சேர்ந்தவர் அய்யனார், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காளியம்மாள். இவர்களுக்கு கணேஷ்குமார் (வயது 10), கவின்குமார் (9) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். அய்யனாரின் தம்பி சந்தானம். இவருடைய மகன் கவுதம் (8).
சந்தானம் தனது குடும்பத்தினருடன் காடல்குடிக்கு அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அய்யனார் ஒரு விபத்தில் இறந்து விட்டார். அதன்பிறகு சந்தானம் தனது அண்ணனின் குடும்பத்தையும் ராமச்சந்திராபுரத்துக்கு அழைத்து வந்து வாடகைக்கு வீடு பார்த்து குடியிருக்க செய்தார். தற்போது சந்தானத்தின் தாயார் மட்டும் காடல்குடியில் வசித்து வருகிறார். ராமச்சந்திராபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் கணேஷ்குமார் 5-ம் வகுப்பும், கவின்குமார் 4-ம் வகுப்பும், கவுதம் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவர் கள் கவுதம், கணேஷ்குமார், கவின்குமார் ஆகியோர் பாட்டி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினர். உடனே காளியம்மாள் சிறுவர்கள் கணேஷ்குமார், கவின்குமார், கவுதம் ஆகியோரை அழைத்துக்கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பாக காடல்குடிக்கு சென்றார்.
நேற்று முன்தினம் மதியம் கணேஷ்குமார், கவின்குமார், கவுதம் ஆகிய 3 பேரும் காடல்குடி மெயின் ரோடு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள கண்மாய் பகுதிக்கு சென்றும் விளையாடி உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கண்மாயில் ஊற்று தண்ணீருக்காக தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் 3 பேரும் தவறி விழுந்ததாக தெரிகிறது. 3 பேரும் சிறுவர்கள் என்பதால் தண்ணீரில் தத்தளித்தனர். ஆட்கள் நடமாட்டம் குறைவான பகுதி என்பதால் அவர்களது அபய குரல் யாருடைய காதுகளுக்கும் கேட்கவில்லை. இதனால் 3 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விளையாட சென்ற சிறுவர்களை காணாமல் காளியம்மாள், அவருடைய உறவினர்கள் தேடி அலைந்தனர். இரவு வரை தேடியும் சிறுவர்கள் பற்றிய எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. பிள்ளைகள் என்ன ஆனார்களோ! என்ற பரிதவிப்பில் அவர்களது குடும்பத்தினர் இருந்தனர். நேற்று காலையில் அந்த கண்மாய் குழியில் 3 சிறுவர்களின் உடல்களும் மிதந்தன. அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காளியம்மாள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பதறி அடித்துக் கொண்டு வந்த அவர்கள், 3 பேரின் உடல்களையும் கண்டு தரையில் உருண்டு கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
இதுபற்றி காடல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த பகுதியில் உள்ளவர்கள் உதவியுடன் 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்மாயில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தால் காடல்குடி, ராமச்சந்திராபுரம் கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன.