ராகுல்காந்தி தலைமையில் நடக்கும் எழுச்சி பேரணியில் தவறாமல் பங்கேற்கவேண்டும், அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பு
டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் நடக்கும் எழுச்சி பேரணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரசாருக்கு மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் அழைப்பு விடுத்துள்ளார்.;
புதுச்சேரி,
புதுவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தவறான பொருளாதார கொள்கையை கடைபிடித்து சர்வாதிகாரமாக மக்கள் விரோத சட்டங்களை திணித்து நாட்டின் வளர்ச்சியை சீர்குலைத்து, மதவாதத்தை தூண்டிவிட்டு தேச ஒற்றுமையை நிர்மூலமாக்கி, பொதுமக்கள் அச்ச உணர்வுடன் வாழ்கின்ற அசாதாரண சூழ்நிலையை மக்கள் விரோத மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு ஏற்படுத்தியுள்ளது.
மனித மிருகங்களால் அப்பாவி சிறுமிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற கொடூர செயல்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மோடி அரசு வாய்மூடி வேடிக்கை பார்க்கிறது.
தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் அரணாக விளங்கிய வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்து அவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மதவாத பாரதீய ஜனதா அரசு ஈடுபட்டு வருகிறது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா அரசின் உண்மையான சுயரூபத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வருகிற 29-ந்தேதி காலை 10 மணி அளவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கிறது. இந்த எழுச்சி பேரணியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய தேசத்தின் ஒரே நம்பிக்கை ராகுல்காந்தியின் ஆணைக்கு இணங்க மக்கள் விரோத மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசுக்கு பாடம் புகட்டிட டெல்லியில் நடைபெறும் மக்கள் எழுச்சி பேரணியில் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.