414 வீடுகளுக்கு அடிப்படை வசதிகள்: கலெக்டர் பிரபாகர் பேச்சு
சென்னிமலை அருகே கூத்தம்பாளையம் ஊராட்சியில் உள்ள 414 வீடுகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் கூறினார்.
சென்னிமலை,
இந்தியா முழுவதும் நேற்று தேசிய ஊராட்சிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதனால் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கூத்தம்பாளையம் பகுதியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் கிராம சுயராஜ்ய திட்டத்தின் கீழ் சென்னிமலை அருகே உள்ள கூத்தம்பாளையம் ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 414 வீடுகள் உள்ளது. தற்போது இத்திட்டத்தின்படி அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், கியாஸ் இணைப்பு, தனி நபர் கழிப்பறை, பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படும். மேலும், திடக்கழிவு மேலாண்மை, பிரதமர் வீட்டுவசதி திட்டம், வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட வசதிகளும் விரைவில் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் அடுப்பு வழங்கப்பட்டது. இதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் குழந்தைசாமி, ஈரோடு சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட தேர்தல் அலுவலர் உமாசங்கர், சென்னிமலை அரசு மருத்துவ அலுவலர் பிரசன்ன வெங்கட்டரமணன், காசிபாளையம் டாக்டர் குமார், பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி உள்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.