வனத்துறை சார்பில் 24 ஆயிரத்து 137 மரக்கன்றுகள் நட இலக்கு அமைச்சர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனத்துறை சார்பில் 24 ஆயிரத்து 137 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கூறினார்.
கிருஷ்ணகிரி,
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளையொட்டி மரம் நடும் விழா கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். வன அலுவலர்கள் தீபக் பில்கி, வரதராஜன், எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து வனத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி மாநிலம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகள் நட அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் வனத்துறை சார்பில் 24 ஆயிரத்து 137 மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர்புற வளர்ச்சி மற்றும் வாகன எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் காற்று மண்டலம் மாசு அடைந்து வருகிறது.
உலக வெப்பமயமாதல் ஒரு பெரும் சவாலாக எதிர்கால தலைமுறைகளுக்கு இருக்கும் என்று வல்லுனர்கள் எச்சரித்து வருகிறார்கள். எனவே மரக்கன்றுகள் அதிக அளவில் நடுவது இன்றைய சூழலில் இன்றியமையாத சமுதாய நலப்பணியாக உள்ளது. தேசிய வனக்கொள்கையின் படி மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பை வனம் மற்றும் மரங்கள் நிறைந்த பரப்பாக உயர்த்துவதற்கு காலியாக உள்ள இடங்களிலெல்லாம் மரம் நட்டு வளர்ப்பது அவசியமாகிறது.
இதற்காக ஒரு மாபெரும் செயல் திட்டத்தினை உருவாக்க வேண்டும் என்று மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஆணையிட்டார். மரங்களை நாம் குழந்தைகளை போல வளர்க்க வேண்டும். எதிர்காலத்தில் நமக்கு நல்ல பலன்களை கொடுக்கும். எனவே மரங்களை வளர்ப்போம் சுற்று சூழலை பாதுகாப்போம் என உறுதி கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் 27 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கி னார். இதில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், வனவியல் விரிவாக்க அலுவலர் ராம்குமார், வன அலுவலர் குமார், மற்றும் அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, கிருஷ்ணகிரி முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து, நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.