சிறப்பு கிராம சபை கூட்டம் பொன்.ராதாகிருஷ்ணன்-கலெக்டர் பங்கேற்பு

தக்கலை அருகே முத்தலக்குறிச்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் கலந்துகொண்டனர்.

Update: 2018-04-24 22:45 GMT
முளகுமூடு,

பஞ்சாயத்து ராஜ் சட்டம் நடைமுறைக்கு வந்த தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளிலும் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. தக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தலக்குறிச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.

கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் முன்னிலை வகித்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

வெளிப்படையான நிர்வாகம், ஊராட்சி வளர்ச்சி திட்ட அறிக்கை, வரவு செலவுகள், கிராம ஊராட்சியில் பெண்களின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் பேச்சு ஒலிபரப்பப்பட்டது. நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சரோஜா, ரவிக்குமார் மற்றும் செல்லம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மகளிர் திட்ட இயக்குனர் பிச்சை, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சையத் சுலைமான், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேச்சியம்மாள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்