தூத்துக்குடி, திருச்செந்தூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி, திருச்செந்தூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி, திருச்செந்தூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணி தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். பூங்காவில் இருந்து தொடங்கியது. பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் ரங்கநாதன் தொடங்கி வைத்தார். பேரணி பழைய பஸ் நிலையம், குரூஸ்பர்னாந்து சிலை வழியாக தென்பாகம் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. பேரணியில் சென்றவர்கள் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியபடியும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியபடியும் சென்றனர்.
பேரணியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், ராஜேஷ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் சமுத்திரம், கிளை மேலாளர்கள் பாஸ்கர், பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதையொட்டி சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை வலியுறுத்தி திருச்செந்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, பகத்சிங் பஸ்நிலையம், காமராஜர் சாலை, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி வழியாக மீண்டும் காமராஜர் சாலை வழியாக வட்டார போக்குவரத்து அலுவலத்தில் நிறைவுபெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஹெல்மெட் அணிந்தவாறு இருசக்கர வாகன ஓட்டிகளும், சீட் பெல்ட் அணிந்தவாறு நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் பேரணியாக சென்றனர்.
பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன், அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் கண்ணன், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.